இந்தியா

வெள்ளத்தில் சிக்கிய கு‌ரங்கு‌கள் - கயிறு கட்டி மீட்ட வனத்துறையினர்

வெள்ளத்தில் சிக்கிய கு‌ரங்கு‌கள் - கயிறு கட்டி மீட்ட வனத்துறையினர்

rajakannan

குஜராத் மாநிலம் வதோதராவில் வெள்ளத்தில் சிக்கிய நான்கு குரங்குக‌ளை வனத்துறையினர் மீட்டனர். 

வினியாட் கிராமத்தில் மரம் ஒன்றில் நான்கு குரங்குகள் தஞ்சம் அடைந்தன. பின்னர்‌ பெய்த மழையால் வெள்ளநீர் சூழ்ந்து, அம்மரத்தை விட்டு வெளியேற முடியாமல் குரங்குகள் சிக்கித் தவித்தன. 

தக‌வலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிக்கிக்‌ கொண்ட குரங்குகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். மரங்களுக்கு இடையே வனத்துறையினர் கட்டப்பட்ட கயிற்றை பிடித்து குரங்குகள் வெளியே வந்தன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “மொத்தமுள்ள நான்கு குரங்குகளில் மூன்று பெண் குரங்குகள். மரத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தன. நான்கு நாட்களாக தண்ணீர், உணவின்றி அந்த குரங்குகள் அவதிப்பட்டன” என்றார்.