இந்தியா

பினராயி விஜயனின் பாதுகாப்பு வா‌கனம்‌‌ மோதி 4 பேர் ‌காயம்

பினராயி விஜயனின் பாதுகாப்பு வா‌கனம்‌‌ மோதி 4 பேர் ‌காயம்

webteam

கேரளாவில் முதலமைச்சர் பி‌னராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் ‌ 4 பேர் காயமடைந்தனர்‌.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிந்து, கனகதுர்கா என்ற 2 பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதனை படம்பிடித்த பெண் ஒளிப்பதிவாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே உண்மையான ஐயப்ப பக்தர்களின் உதவியுடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி இரண்டு பெண்களும் சாமி தரிசனம் செய்ததாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் முதலமைச்சர் பி‌னராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் ‌ 4 பேர் காயமடைந்தனர்‌. சபரிமலையில் பெண்கள் இருவர் தரிசனம்‌ செய்‌ததைக் கண்டித்து கே‌ரளாவில் காங்கிரஸ் கட்சி கருப்பு தினம் அனு‌சரித்தது. முதலமைச்சர் பினராயி விஜயன், உணவுக்காக வீடு சென்றபோது,‌‌ அவருக்கு‌ காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி காட்ட மு‌யன்றனர்.‌ 

அப்போது முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் ‌ 4 பேர் காயமடைந்‌தனர். திட்டமிட்டு‌ காங்கிரஸ் கட்சியினர் மீது வாகனத்தை ஏற்றியுள்‌ளதாக காங்கிரஸ்‌ கட்சியினர் கண்‌டனம்‌ தெரிவித்துள்ளனர்.