மேற்கு வங்கத்தில் புதிய பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது web
இந்தியா

மேற்கு வங்காளத்தில் புதிய 'பாபர் மசூதிக்கு' அடிக்கல்.. சவுதியிலிருந்து வந்த 2 மதகுருமார்கள்!

33 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் இன்று புதிய பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது..

Rishan Vengai

அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர்மசூதியை போன்ற தோற்றத்துடன் புதியமசூதி மேற்கு வங்காள மாநிலத்தில் கட்டப்பட உள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்துஇடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டினார். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சவுதி அரேபியாவில் இருந்து மத அறிஞர்கள் இருவரும் பங்கேற்றனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அயோத்தியில்பாபர் மசூதி 33 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட அதே நாளில் அதேபோன்ற மசூதி கட்டும் பணிதொடங்கியுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.