இந்தியா

சசிகலாவை சந்திக்க 4 மணிநேரம் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள்..!

சசிகலாவை சந்திக்க 4 மணிநேரம் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள்..!

Rasus

பெங்களூரு சிறையில் தண்டனை பெற்றுவரும் சசிகலாவை சந்திக்க 4 மணி நேரமாக காத்திருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சசிகலாவைச் சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சிறை வளாகத்தில் 4 மணிநேரமாக காத்திருந்தனர். ஆனால், சசிகலாவை சந்திக்க நாள்தோறும் அனுமதிக்க முடியாது என்று கூறி சிறைத் துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் ஆகியோரும் பெங்களூரு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.