இந்தியா

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை

Rasus

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை மிகுந்த அளவில் மோசமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.