இந்தியா

ட்ரம்புக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் மன்மோகன்சிங் பங்கேற்கவில்லை?

ட்ரம்புக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் மன்மோகன்சிங் பங்கேற்கவில்லை?

Rasus

அமெரிக்க அதிபர் ட்ரம்பை கௌரவிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கப்போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருந்தளிக்க இருக்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதை முதலில் ஏற்றிருந்த மன்மோகன் சிங், திடீரென பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், ட்ரம்பை சந்திக்க எதிர்கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு தராததால் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அத்துடன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் 11 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெறுகிறது. பகல் 12.40 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தும் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.