இந்தியா

வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி

வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி

webteam

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் பிரதமரான வாஜ்பாய் (93) அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்துவந்தார். இந்த நிலையில் உடல் நிலைநிலை மோசம் அடைந்ததால் இன்று காலை அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி தான் தன்னுடைய 93ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக வாஜ்பாய் பல ஆண்டுகளாகவே பொது நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு வாஜ்பாய்க்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.