இந்தியா

முதலாளித்துவ பட்ஜெட் இது - ப.சிதம்பரம் விமர்சனம்

முதலாளித்துவ பட்ஜெட் இது - ப.சிதம்பரம் விமர்சனம்

கலிலுல்லா

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் முதலாளித்துவ பட்ஜெட் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ''நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் இது. மூலதன செலவு, வட்டியில்லா கடன், தவிர, வேறெதுவும் குறிப்பிடும்படியாக இல்லை.

சிறு குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து மானியங்களும் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.

ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றிருந்தது. இதன்மூலம், ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி.நாட்டில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போது தான் நிதியமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். வரிசலுகை குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை'' என்று விமர்சித்துள்ளார்.