இந்தியா

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜகதீஷ் கட்டர் மாரடைப்பால் உயிரிழப்பு

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜகதீஷ் கட்டர் மாரடைப்பால் உயிரிழப்பு

EllusamyKarthik

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜகதீஷ் கட்டர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 78. 1993 முதல் 2007 வரை மாருதி Udyog பிரிவில் அவர் பணியாற்றி உள்ளார். முதலில் இயக்குனராக இணைந்த அவர், பின்னாளில் நிர்வாக இயக்குனராக பணி உயர்வு பெற்றார். 

மாருதியில் பணிக்கு சேருவதற்கு முன்னதாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். 2019 ஆம் ஆண்டு அவர் மீது கடன் மோசடி புகாரில் சிபிஐ வழக்கும் பதிவு செய்திருந்தது.