இந்தியா

குமாரசாமி, சித்தராமையா மீது தேசத்துரோக வழக்கு

குமாரசாமி, சித்தராமையா மீது தேசத்துரோக வழக்கு

jagadeesh

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் மீது அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேசத் துரோக பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 27-ஆம் தேதி குமாரசாமி ஆட்சியில் இருந்தபோது, அவரது கட்சி மற்றும் காங்கிரசை சேர்ந்த சில தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதனை கண்டித்து அக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது வருமான வரி அதிகாரிகள் தடுக்கப்பட்டதாகவும், அதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததாகவும் புகார் எழுந்தது. 

அந்த சம்பவத்தின் அடிப்படையில் குமாரசாமி, சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள் பரமேஸ்வரா, சிவக்குமார் மற்றும் பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் சுனீல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 20ன் கீழ் தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.