சண்டிகரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதியின் வீட்டு வாசலில் கண்டறியப்பட்ட கட்டுகட்டான பணம் தொடர்பான வழக்கில், தொடர் போராட்டத்திற்கு , நீதிபதி நிர்மல் யாதவை நிரபராதி என்று அறிவித்து நீதிமன்றம் அவரை விடுத்துள்ளது.
கடந்த 2008, ல் பஞ்சாப் - ஹரியான உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர்கள்தான் நிர்மல் யாதவ் மற்றும் நிர்மல்ஜித் கவுர். அதே ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று, சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பணக்கட்டுகள் நீதிபதி நிர்மல்ஜித் கவுரர் வீட்டு வாசலில் இருந்துள்ளது .
இதை கண்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி நிர்மல்ஜித் இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்தார். சண்டிகர் காவல்நிலையத்தில் முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்டநிலையில், இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையும் நடைப்பெற்றது.
அதில்தான், மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தகவலும் கிடைத்துள்ளது.
அதன்படி, அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவரும் நிர்மல் யாதவ்க்கு, சொத்து விவகாரம் ஒன்றில் சாதகமாக செயல்பட கொடுக்கப்பட்ட பணம்தான் இந்த பணம் என்றும், இதை நிர்மல் யாதவ் வீட்டில் வைப்பதற்கு பதில், நிர்மல்ஜித் கவுரவ் வீட்டில் வைத்துவிட்டதாகவும் இருவரின் பெயரும் ஒரே மாதிரியாக இருந்ததால் குழம்பிவிட்டதாகவும் குற்றவாளி தெரிவித்திருந்தார்.
இதனை முற்றிலும் மறுத்த நீதிபதி நிர்மல் யாதவ் இந்த வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது, தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், தான் செய்ததற்கான் எந்த ஆதாரமும் தற்போது வரை எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்று தொடர்ந்து வாதிட்டார் நிர்மல் யாதவ்.
இந்த நிலையில்தான், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. அதில், 84 சாட்சியங்களில் 69 பேரிடம் விசாரணை நடத்தியதில், கிடத்த தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி நிர்மல் யாதவ் மீது குற்றச்சத்துக்கான எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பத்தை போன்று சமீபத்தில் டில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்துள்ளனர். நீதிபதி யஷ்வந்த் வர்மாவும் தன்மீதான குற்றத்தை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.