இந்தியா

பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவிப்பு!

பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவிப்பு!

EllusamyKarthik

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் ஜேஜ்பால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தெஹல்கா இதழின் நிறுவனரும், முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பால் மீது, அவரது நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். கோவாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தின் போது, லிப்டில் வைத்து தன்னிடம் தருண் தேஜ்பால் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அந்த பெண் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை தருண் தேஜ்பால் மறுத்திருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது பிணையில் உள்ள நிலையில், தேஜ்பால் மீதான பாலியல் புகார் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும், கோவா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேஜ்பால், நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். பொய்யான புகாரால், ஏழரை ஆண்டுகளாக பொது வாழ்விலும், சொந்த வாழ்விலும் பல்வேறு இன்னல்களை சந்தித்தாக தேஜ்பால் கூறியுள்ளார்.