இந்தியா

டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்

டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்

Rasus

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார். அவருக்கு வயது 82.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குரானா கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 2004-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த குரானா, நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் கீர்த்தி நகரில் உள்ள தனது வீட்டில் குரானா உயிரிழந்தார். அவருக்கு ‌ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். குரானாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஹர்ஷ் வர்தன், இதுதவிர பல அரசியல் தலைவர்களும் குரானாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.