முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்த சித்து ஓய்வுக்கு பிறகு பாரதிய ஜனதாவில் சேர்ந்து மக்களவை எம்பியாக தேர்வானார், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அவர் பாரதிய ஜனதாவில் இருந்து விலகினார். இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.சித்து துணை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றும் அமரிந்தர் தெரிவித்துள்ளார்.