இந்தியா

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

webteam

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்பி ஆக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 46வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், 2018ஆம் ஆண்டு அக்டோடபர் 3ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை பணியில் இருந்தார். இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநிலங்களை எம்.பி-யாக இதற்கு முன்னும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கடந்த 1991 ஓய்வு பெற்ற ரங்கநாதன் மிஸ்ரா என்பவர், 1998-2004ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.