இந்தியா

360 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு: வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சலுகை

360 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு: வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சலுகை

webteam

வெளிநாட்டுப் பயணிகள் இந்திய ரயில்களில் பயணிப்பதற்கு 360 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. 

தற்போது 120 நாட்களுக்கு முன்பு மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் இச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. எனினும் ஏசி வகுப்பு பெட்டிகள், ராஜ்தானி, சதாப்தி, தேஜாஸ் போன்ற சிறப்பு ரயில்களில் மட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.