இந்தியா

மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார் ஜெய்சங்கர்..!

மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார் ஜெய்சங்கர்..!

webteam

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமர் பதவியை இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்றுக்கொண்டார். அவருடன் 58 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் பதவி விலகிய பின்னர், அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தபோது பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இருவரிடமும் நற்பெயரை பெற்றவர். முன்னதாக, மோடி பிரதமரான பின்னர் அமெரிக்க சென்றிருந்தபோது, அவருக்கு மிகவும் உதவியாக செயல்பட்டவர் ஜெய்சங்கர். இதன் காரணமாகவே அவர் வெளியுறவுத்துறை செயலராக நியமிக்கப்பட்டு, தற்போது அமைச்சராகவும் ஆக்கப்பட்டுள்ளார்.