இந்தியா

கொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது? - பிரதமர் மோடி கேள்வி

கொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது? - பிரதமர் மோடி கேள்வி

rajakannan

 கொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா பொது சபையில் இந்தியா சார்பில் பேசிய மோடி, “130 கோடி இந்தியர்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்காக இந்த சபைக்கு நான் வந்திருக்கிறேன். ஐநா சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்துள்ளனர். இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.