இந்தியா

''உணவுக்கு மதம் கிடையாது'' - வாடிக்கையாளர் புகாருக்கு சொமாட்டோ பதில்

''உணவுக்கு மதம் கிடையாது'' - வாடிக்கையாளர் புகாருக்கு சொமாட்டோ பதில்

webteam

இந்து அல்லாத ஒருவர் உணவு கொண்டு வந்து கொடுத்ததால் ஆர்டரை கேன்சல் செய்வதாக ஒருவர் கூறியதற்கு உணவுக்கு மதமில்லை என சொமாட்டோ பதில் அளித்துள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த உணவை கேன்சல் செய்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, '' இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் செய்கிறேன். 

நான் உணவு வழங்குபவரை மாற்றக்கோரினேன். ஆனால் அவர்கள் மாற்றவில்லை. என் பணத்தையும் திருப்பித் தரவில்லை. உணவை ஏற்றுக்கொள்ளும்படி என்னை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு பணம் திரும்ப வேண்டாம். நான் உணவை கேன்சல் செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அவரது ட்வீட்டை குறிப்பிட்டு பதில் அளித்துள்ள சொமாட்டோ நிறுவனம் உணவுக்கு மதம் எதுவும் கிடையாது. உணவே ஒரு மதம் தான் எனத் தெரிவித்துள்ளது.சொமாட்டோவின் பதிலுக்கு பலரும் ஆதரவு கருத்துகளையும், எதிர்க் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.