டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
டெல்லியில் இந்தியா கேட், ராஜபாதை போன்ற இடங்களில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் தலைநகர் லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தீ மூட்டி குளிரிலிருந்து தப்பி வருகின்றனர். அங்கும் பனியால் சாலைப் போக்குவரத்து பெரிதும் தடைபட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக 36 ரயில்களின் வரத்து தாமதமாகியுள்ளது. 2ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.