இந்தியா

இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்!

இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்!

webteam

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய அற‌விப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்க மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் 30ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், தொடர் சரிவில் உள்ள வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சலுகைகளை அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ள நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.