இந்தியா

"பிணியின்மை" திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நிர்மலா சீதாராமன்

jagadeesh

‘பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி இன்றைய பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் ‘பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து’ என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி பேசினார்.

அதற்கு விளக்கமளித்த அவர் " நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். திருக்குறள் பாடல் தெரிவிப்பதுபோல 5 அணிகலன்களான நோய் நீக்கம், செல்வம், விவசாயம், மகிழ்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றை அரசு நிறைவேற்றி வருகிறது" என்றார் அவர்.