இந்தியா

வெள்ளத்தில் மூழ்கிய வன விலங்கு சரணாலயம்: 141 விலங்குகள் உயிரிழப்பு

வெள்ளத்தில் மூழ்கிய வன விலங்கு சரணாலயம்: 141 விலங்குகள் உயிரிழப்பு

webteam

அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளம் வடியாத நிலையில், காஸிரங்கா தேசிய வன விலங்குகள் சரணாலயத்தில் வெள்ளத்தில் சிக்கி 141 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காஸிரங்கா பூங்காவின் 80 சதவிகித பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி 141 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாள்தோறும் விலங்குகளின் உடல்களை கண்டெடுப்பதாகவும் நிர்வாகிகள் கூறுகின்றனர். பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, காஸிரங்கா வன விலங்குகள் சரணாலயத்தில் வெள்ளநீர் புகுந்தது.