இந்தியா

டெல்லியில் விமான சேவை பாதிப்பு

டெல்லியில் விமான சேவை பாதிப்பு

Rasus

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிகப்படியான பனி கொட்டுவதால் விடிந்த பின்பும் கூட இருள் சூழ்ந்த நிலையே உள்ளது. எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி விழுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. முன்னறிவிப்பின்றி விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். ஐந்து விமானங்கள் வேறு விமானநிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. 84 வி‌மானங்‌கள் தாமதமாக‌ புறப்பட்டுச் சென்றன.

‌‌விமான சேவை பெரிதும் ‌பாதிக்கப்பட்டதால், டெல்லி விமானநிலையத்தில் நூற்‌றுக்‌க‌ணக்கில்‌ பயணிகள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் விமானநிலையத்தில்‌ வழக்க‌த்தைவிட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பனிமூட்டத்தால் நேற்று மட்டும் சுமார் 200 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.