ஐந்து மாநில தேர்தலில், கோவாவில் அதிகபட்சமாக 1.2 சதவீதம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தல்களில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவாவில் 1.2 சதவீத பேரும், உத்தராகண்டில் ஒரு சதவீதம் பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். பாஜக மாபெரும் வெற்றி பெற்ற உத்தரப்பிரதேசத்தில் 0.9 சதவீதம் பேரும், பஞ்சாபில் 0.7 சதவீதம் பேரும் நோட்டாவிற்கு வாக்களித்தனர். குறைந்தபட்சமாக, மணிப்பூரில் 0.5 சதவீதம் பேர் நோட்டாவை தேர்வு செய்தனர். தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், நோட்டாவிற்கு வாக்களிக்கலாம்.