இந்தியா

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்

webteam

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.