இந்தியா

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேர் கைது

webteam

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 3 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அதில் 3 பேர் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததா‌‌கக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 மீனவர்களும் இன்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இலங்கை கடற்படையினரால் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 159 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.