சாலையோரத்தில் டன் கணக்கில் கிடந்த மீன்களை பொதுமக்கள் ஆர்வமாக அள்ளிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நெடுஞ்சாலையின் ஓரத்தில் டன் கணக்கில் உயிருடன் துடிக்கும் மீன்களை பொதுமக்கள் அள்ளிச் செல்லும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பெங்களூரில் உள்ள பொம்மகட்டா ஏரி நிரம்பி, அதிலிருந்த மீன்கள் சாலைக்கு வந்ததாகவும் அவற்றை பொதுமக்கள் அள்ளிச் சென்றதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் உண்மையில் அந்த வழியாக மீன்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கி உள்ளது. அதிலிருந்த மீன்கள் சாலையின் ஓரத்தில் கொட்டி உள்ளது என்றும், அந்த மீன்களைதான் பொதுமக்கள் அள்ளிச் சென்றுள்ளனர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. அதேபோல், இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி எது என்பதும் குறித்த உறுதியான தகவல் அறியப்படவில்லை. மேலும், ஏரி நிரம்பி, மீன்கள் வெளியே வந்ததாக பரவிய தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.