இந்தியா

இந்திய கடற்படையில் முதன்முதலாக முன்களப் பெண் அதிகாரிகள்..!

இந்திய கடற்படையில் முதன்முதலாக முன்களப் பெண் அதிகாரிகள்..!

webteam

இந்திய கடற்படையின் முன்களப்போராளிகள் பிரிவில் முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்கள் குமுதினி தியாகி மற்றும் ரிதி சிங். இவர்கள் ஹெலிகாப்டர் ரோந்துப் பிரிவில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடற்படையின் முன்களப் போராளிகள் பிரிவில் துணை லெப்டினண்ட்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையின் முன்களப் போராளிகள் பிரிவில் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.