இந்தியா

குஜராத் தேர்தல்: 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு

குஜராத் தேர்தல்: 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு

webteam

குஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் ரூபானி, காங்கிரஸ் மூத்த தலைவர் சக்தி சிங் கோஹில் உள்ளிட்ட 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால், இந்த தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சியே நடைபெற்று வருகிறது. தற்போது நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளது. 

அதேவேளையில் பாரதிய ஜனதாவை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸும் ஈடுபட்டுள்ளது. குஜராத்தில் 2ம் கட்டமாக வரும் 14ம் தேதி 93 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.