நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் எக்ஸ் தளம்
இந்தியா

பீகார் தேர்தல்.. அடுத்த முதல்வர் யார்? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

243 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட பீகாரில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு முன்பே கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Prakash J

243 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட பீகாரில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு முன்பே கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

243 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கு முன்பே சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல கட்ட ஆலோசனைகளை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்த நிலையில், பின்னர் தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி, முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டத்தேர்தல் 11 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல் கட்டத் தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில் மீதமுள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 14 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ்வி யாதவ்

பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் i-n-d-i-a கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளர் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறிவருகிறது. ஆனால் தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டு முடிவு எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான உதித்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வேட்பாளர்களை இறுதிசெய்வது குறித்து காங்கிரஸ் தேர்தல் கமிட்டி டெல்லியில் இன்று ஆலோசனை செய்யவுள்ளது.

மறுபுறம், பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளுடன் சிராக் பஸ்வான் கட்சியும் முக்கியமான 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. சிராக் பஸ்வான் கட்சிக்கு என்டிஏ 25 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், சிராக் 40 இடங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஐஏஎன்எஸ் மேட்ரிஸ் ஆகியவை இணைந்து நடத்திய இக்கணிப்பில் ஆளும் கூட்டணி 150 முதல் 160 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ்குமார்

பாஜகவுக்கு 35%, ஐக்கிய ஜனதாதளத்திற்கு 18%, ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 13% ஜன் சுராஜ் கட்சிக்கு 8% காங்கிரசுக்கு 2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும் பீகாரில் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்பதில் நிதிஷ் குமாருக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அவருக்கு 42% ஆதரவு உள்ள நிலையில் தேஜஸ்வி யாதவுக்கு 15%, பிரஷாந்த் கிஷோருக்கு 9% பேர் சிராக் பஸ்வானுக்கு 8% பேர், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு 3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.