இந்தியா

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரை..!

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரை..!

Rasus

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். தனி விமானம் மூலம் டெல்லி திரும்பிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இதனிடையே, ‘மனதோடு நான்’ என்ற மன் கி பாத் நிகழ்ச்சி மீண்டும் இன்று தொடங்குகிறது. அப்போது, நாட்டின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து பிரதமர் உரையாற்றுவார் என கூறப்படுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை வானொலியில் இடம்பெற்று வந்தது. தேர்தல் காரணமாக மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறுத்தப்பட்டிருந்தது.