இந்தியா

நவி மும்பையில் பயங்கர தீவிபத்து!

நவி மும்பையில் பயங்கர தீவிபத்து!

webteam

நவி மும்பை அருகே இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நவி மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. இங்கு இன்று அதிகாலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென்று எரிந்தது. பக்கத்து குடோன்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்து வருகின்றனர். இந்த விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.