மும்பையில் கோரேகான் பகுதியில் உள்ள திரைப்பட ஸ்டூடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளின் தளர்வுகளுக்கு பிறகு மும்பை கோரேகான் பகுதியில் உள்ள திரைப்பட ஸ்டூடியோவில் திரைப்படம் மற்றும் சீரியல்களுக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டை பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கு தொடர்ந்து பரவிவருவதால், அங்கு அமைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடங்கள் போன்ற செட்களிலும் தீ பரவியுள்ளது. மேலும் ஸ்டூடியோக்களை மூட, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை ஒரு இடத்தில் குவித்து வைத்திருக்கின்றனர். அந்த இடத்திலும் தீ தொடர்ந்து பரவி வருவதால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை எழுந்துள்ளது.
தீயை அணைக்க 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றன. காவல்துறை சார்பாக இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அருகில் குடியிருப்புகள் இருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

#Mumbai #AjayDevgn pic.twitter.com/AVVX7Yh2YA
— Sp Yashwanth (@SpYaswanth) February 2, 2021