ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் குடமுழுக்கு நிகழ்விற்காக நடைபெற்ற யாகத்தின்போது தீ விபத்து ஏற்பட்டது.
வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு நிகழ்விற்காக கோயிலில் உள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கம்போல இன்று யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வேகமாக பரவிய தீயால் அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் 3 தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஏராளமான சிவாச்சாரியார்களுக்கு
காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.