இந்தியா

காற்று மாசு விதி மீறல்: ரூ.14 கோடி அபராதமாக வசூல்

காற்று மாசு விதி மீறல்: ரூ.14 கோடி அபராதமாக வசூல்

jagadeesh

டெல்லியில் காற்று மாசு சட்ட விதிகளை மீறியவர்களிடமிருந்து அபராதத் தொகையாக 14 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. 

தீபாவளியையொட்டி காற்று மாசு அதிகரிக்கும் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்தது. அதன்பேரில் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, மாநகராட்சி உள்ளிட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த 300 குழுக்கள் தீவிர வாகன சோதனை, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கண்காணித்தனர். டெல்லி முழுவதும் கடந்த 15 நாட்களில் மேற்கொண்ட நடவடிக்கையில் 99 ஆயிரத்து 202 விதிமுறை மீறல்கள் நடந்தது தெரியவந்துள்ளது. அதற்காக 13 கோடியே 99 லட்சம் ரூபாய் அபராதம் வசூலாகியிருக்கிறது.