இந்தியா

"கிரிப்டோ கரன்சி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்" -  நிர்மலா சீதாராமன்

"கிரிப்டோ கரன்சி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்" -  நிர்மலா சீதாராமன்

JustinDurai
கிரிப்டோ கரன்சி தொடர்பான மசோதா, அமைச்சரவை ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கிரிப்டோ கரன்சி குறித்த மசோதா வெளியாகும் வரை அதுதொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுமா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தற்போது தடை விதிக்கப்படாது என்றார். ரிசர்வ் வங்கி மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று கிரிப்டோ கரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
கிரிப்டோ கரன்சிகளை அனுமதிக்க கூடாது என ரிசர்வ் வங்கி ஏற்கனவே பரிந்துரை செய்திருப்பதால், அதனை தடை செய்யும் வகையில் மசோதா கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.