மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 9ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதன்மூலம், மத்திய பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்த 3ஆவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். இந்த நிலையில், அவர் இதுவரை வாசித்த பட்ஜெட் உரைகளின் நீளம் குறித்த பட்டியலைப் பார்க்கலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 9ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதன்மூலம், மத்திய பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்த 3ஆவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் சமர்ப்பித்து முதலிடத்தில் உள்ள நிலையில் ப.சிதம்பரம் 9 பட்ஜெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் இருந்த நிலையில், அவரை நிர்மலா சீதாராமன் தற்போது சமன் செய்துள்ளார். இந்த நிலையில், அவர் வாசித்த பட்ஜெட் உரைகளின் நீளம் குறித்த பட்டியலைப் பார்க்கலாம்.
முதல்முறையாக 2019-20ஆம் ஆண்டு 2.15 மணி நேரம் பட்ஜெட்டை வாசித்த அவர், 2020-21இல் 2.42 மணிநேரமாகவும், 2021-22இல் 1.40 மணி நேரமாகவும், 2022-23இல் 1.32 மணிநேரமாகவும், 2023-24இல் 1.26 மணி நேரமாகவும், மீண்டும் 2023-24இல் 57 நிமிடங்களாகவும், அடுத்து 2024-25இல் 1.25 மணி நேரமாகவும், அதைத் தொடர்ந்து 2025-26இல் 1.15 மணி நேரமாகவும், தற்போது 1.25 மணி நேரமாகவும் உள்ளது.