இந்தியா

2023-ஆம் ஆண்டுக்குள் ப்ரி-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி: பட்ஜெட்டில் அறிவிப்பு

webteam

2023-ஆம் ஆண்டுக்குள் ப்ரி-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் துறைக்கு புதிய உத்வேகம் அளிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளததாக கூறிய மத்திய நிதியமைச்சர், புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை, 2023 ஆம் ஆண்டுக்குள் ப்ரி-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார். மேலும் துறைமுகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், கூடுதலாக தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும், 27,000 கிமீ தொலைவுக்கு ரயில்பாதை
மின்மயமாக்கல் ஆக்கப்படும் என்று கூறிய நிதியமைச்சர், தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். மேலும் டெல்லி-மும்பை இடையேயான அதிவிரைவுச் சாலை 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.