இந்தியா

'அல்வா' கொடுத்த அருண் ஜேட்லி!

webteam

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பட்ஜெட் அறிக்கைகள் அச்சிடும் பணி இன்று தொடங்கியது.

இதற்கு முன்னதாக மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக்கில் அல்வா செய்யும் வழக்கமான நடைமுறை நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அல்வா செய்ததுடன் அதை பட்ஜெட் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்த நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் பகிர்ந்து உண்டார். 

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அச்சிடும் பணி தொடங்கும் முன்பு நிதியமைச்சகத்தில் அல்வா சமைக்கும் நிகழ்ச்சி நடக்கும். அதன்படியே இன்றும் நடந்துள்ளது. இதில் பங்கேற்று அல்வா உண்ட பணியாளர்கள், இதன் பின் பட்ஜெட் வெளியாகும் வரை வெளியுலகுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினருடன் கூட தொடர்பு கொள்ளக் கூடாது. நிதியமைச்சர் மற்றும் அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஒரு சிலருக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரகசியம் வெளியாகக் கூடாது என கருதி இந்த நடவடிக்கை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.