மல்யுத்த சவாலில் களத்தில் குதித்த நடிகை ராக்கி சாவந்தை வீராங்கனை ஒருவர் தூக்கி வீசியதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், ’என் சகியே’, ’முத்திரை’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். சமீபத்தில் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பானது. அதுகுறித்து பேசிய ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.
இந்நிலையில் சண்டிகாரில் உள்ள தவ் தேவிலால் ஸ்டேடியத்தில் நடந்த மல்யுத்த போட்டியின் தொடக்க விழாவில் நடனம் ஆட சென்றிருந் தார் ராக்கி சாவந்த். நடனம் ஆடி முடிந்ததும் பார்வையாளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருந்தார். அது மகளிர் மல்யுத்த போட்டி. மல்யுத்த வீராங்கனை ரோபெல் என்பவர் மற்றொரு வீராங்கனையை தோற்கடித்தார். பின்னர், ‘என்னுடன் மோத பெண்கள் யாராவது தயாராக இருக்கிறீர் களா?’ என்று சினிமா படங்களில் வருவது போல பார்வை யாளர்களை நோக்கி கேட்டார்.
பார்வையாளர் பகுதியில் இருந்த ராக்கி, ‘நான் இருக்கேன்’ என்று பந்தாவாக எழுந்தார். அவரை மல்யுத்த ரிங்கிற்குள் வரச் சொன்னார் வீராங்க னை. சென்றார் ராக்கி. ‘நான் உங்கள் சவாலை ஏற்கிறேன். ஆனால், என்னை போல் நீங்கள் நடனம் ஆட வேண்டும். ரெடியா?’ என்று கேட்டார். ‘அதென்ன பெரிய விஷயம். நான் நடனம் ஆடுகிறேன். முதலில் என்னுடன் மோதுங்கள்’ என்றார் வீராங்கனை.
ராக்கிக்கும் மல்யுத்தம் தெரியும் என்றே அங்கிருந்த பார்வையாளர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் போலீ சாரும் நினைத்திருந்தனர். ஆனால், அவருக்கு மல்யுத்தம் தெரியாது என்பது பிறகுதான் தெரிய வந்தது.
ஏனென்றால் ஒரே நொடியில் ராக்கியை தலைக்கிழாகத் தூக்கி தரையில் வீசி எறிந்தார் வீராங்கனை. அவ்வளவுதான். பேச்சு மூச்சின்றி படுத்து விட்டார் ராக்கி. எட்டு நிமிடமாக அவர் எழுந்திருக்கவில்லை. அருகில் இருந்த நடுவரும் பெண் போலீசாரும் ரிங்கிற்குள் சென்று அவரை உசுப்பினர். அப்போது தான் அவர் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து பெண் போலீசாரும் உடன் இருந்த மல்யுத்த வீராங்கனைகளும் அவரை தூக்கி கைத்தாங்கலாக வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக ஸிராக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் கேட்டபோது அவர்கள் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.