32 year old doctor lavanya dead ellen hospital / x
இந்தியா

32 வயதில் ஸ்ட்ரோக் வந்து உயிரிழந்த பெண் மருத்துவர்.. இன்ஸ்டாவை உலுக்கிய சோகம்!

நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்த 32 வயது பெண் மருத்துவர் பிரைன் ஸ்ட்ரோக் மூலம் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rishan Vengai

32 வயதிலேயே ஸ்ட்ரோக் வந்து உயிரிழந்த நெல்லூரைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் லாவண்யாவின் திடீர் மரணம், மருத்துவ சமூகத்தையும் சமூக வலைதளங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேவை மனப்பான்மையுடன் பலருக்கு உதவிய இளம் மருத்துவரின் இழப்பு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மருத்துவத் தொழிலை ஒரு வேலையாக மட்டும் கருதாமல், சேவை மனப்பான்மையுடன் பல நல்ல விசயங்களை செய்துவந்த இளம் மருத்துவரான, நெல்லூரைச் சேர்ந்த டாக்டர் லாவண்யா திடீரெனக் காலமானார். அவருடைய இளம் மரணம் நெல்லூரையும், இன்ஸ்டாகிராமையும் கலங்கடிக்கச் செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பிரபல இளம் நியூராலஜிஸ்ட் (நரம்பியல் நிபுணர்) லாவண்யா (32 வயது). இவர் எனெல் மருத்துவமனையின் (Enel Hospitals) தலைவர் டாக்டர் நாகேந்திர பிரசாத் மற்றும் லட்சுமி ஆகியோரின் மகள் ஆவார். எனல் மருத்துவமனையின் இயக்குநராகவும் பணியாற்றிவந்த லாவண்யா, 'மயஸ்தீனியா கிராவிஸ்' (Myasthenia Gravis) என்ற அரியவகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு, அதைத் தனது தைரியத்தால் வென்று மீண்டும் மருத்துவ சேவைக்குத் திரும்பினார்.

மிகப்பெரிய நோயிலிருந்து மீண்டுவந்த லாவண்யா, ஏழை எளிய மக்களுக்குப் பல இலவச மருத்துவ உதவிகளைச் செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

இந்தசூழலில் இளம் வயதிலேயே உயிருக்கு ஆபத்தான நரம்பியல் நோயிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டிருந்த லாவண்யா, தற்போது ப்ரைன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதில் பிரைன் ஸ்டோக் ஏற்பட்டு மரணித்ததாக வெளியாகியிருக்கும் செய்தி, மருத்துவ சமூகத்திற்கும் நெல்லூர் மக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நரம்பியல் துறையில் தங்கப் பதக்கம் வென்றவரான டாக்டர் லாவண்யாவின் உயிரை, அவரது தந்தையும் கணவரும் மருத்துவர்களாக இருந்தபோதிலும் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது அவரின் குடும்பத்தை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.