சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வயது சான்றை கட்டாயமாக்க திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐதீகப்படி 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இவ்வயதுக்குள் உள்ள பெண்கள் சிலர் தவறான வயதை கூறி கோயிலுக்குள் நுழைய முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து வயது சான்று அடிப்படையில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
அத்துடன், நடப்பு சீசனில் இருந்தே வயது சான்று நடைமுறை தொடங்கப்படும் என்றும் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. இதன்படி ஆதார் அட்டை உள்ளிட்ட உரிய வயது சான்றை 10 வயதுக்குள் இருக்கும் சிறுமியரும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கொண்டு வருவது அவசியம் என தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.