இந்தியா

44 கோடி தடுப்பூசி டோஸ்கள் கொள்முதலுக்கு மத்திய அரசு ஆர்டர்

44 கோடி தடுப்பூசி டோஸ்கள் கொள்முதலுக்கு மத்திய அரசு ஆர்டர்

sharpana

44 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அதில், 25 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும் 19 கோடி கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களும் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதவாக்கில் மேலும் 30 கோடி தடுப்பூசி டோஸ்கள் கொள்முதலுக்கு ஆர்டர் வெளியாகும் என்றும் நிதி ஆயோக் அமைப்பின் மருத்துவப் பிரிவு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். வருகிற 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தடுப்பூசி கொள்முதலுக்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.