Headlines facebook
இந்தியா

Headlines| 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் கைப்பற்றிய பாஜக முதல் திமுக அமோக வெற்றி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரை கைப்பற்றிய பாஜக முதல் திமுக அமோக வெற்றி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் டெல்லியை கைப்பற்றியது பாஜக. மொத்தமுள்ள 70 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

  • டெல்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி.

  • கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷி வெற்றி பெற்றார். டெல்லியில் தொடர்ந்து 3ஆவது முறையாக படுதோல்வியை சந்திக்கும் காங்கிரஸ்.

  • ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பரிதாபம் டெல்லி பேரவைத் தேர்தலில், 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காரணமாக அமைந்த காங்கிரஸ்.

  • பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கூடுதல் வாக்குகள்.

  • டெல்லியில் பாஜக ஆட்சியமைக்கும் நிலையில் புதிய முதல்வர் யார்? கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா அரியணை ஏற வாய்ப்பு.

  • டெல்லியைச் சூழ்ந்த ஆடம்பரம், அராஜகம், ஆணவம் தோற்கடிக்கப் பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம். டெல்லியை சொத்தாக கருதியவர்களை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் பேச்சு.

  • மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி பதிவு. டெல்லியின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடப் போவதாகவும் உறுதி.

  • ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி. 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தமிழர் வேட்பாளரை வீழ்த்தினார் சந்திரகுமார்.

  • நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.. மக்கள் மனதில் இருந்து அ.தி.மு.க. மெல்லமெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்.

  • டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். ஈரோடு கிழக்கில் திமுக பெற்றது போலி வெற்றி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியால் முடியாது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து.

  • நான் கூறியதை எங்கள் சகோதரர்களுக்கு எதிராக திரித்து, விதைத்து விட்டனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி விளக்கம்.

  • கிருஷ்ணகிரி அருகே 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான பள்ளிக்கு, குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர் நடத்திய போராட்டம் வாபஸ்.

  • மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாளை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம்.

  • சேலம் மாவட்டத்தில் மற்றுமொரு அரசுப் பள்ளியில் நடந்த கொடூரம். 10க்கும் அதிகமான மாணவிகளிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியர் கைது.

  • இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீன்பிடி படகுகள் ஏலம். இலங்கை ரூபாயின் மதிப்பில் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட உபகரணங்கள்.

  • ஃப்ரீ ஸ்டைல் ​​கிராண்ட் ஸ்லாம் டூர் சதுரங்கப் போட்டியில் நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் குகேஷ். 7 ட்ராக்கள், 2 தோல்விகளோடு எட்டாவது இடத்தை பிடித்தார்.

  • கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி. விராட் கோலி களமிறங்குவதை உறுதி செய்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்.

  • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது தலையில் பந்து பட்டு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா காயம். நெற்றியில் பந்து தாக்கிய நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டார்.

  • 80ஸ் தொடங்கி, 2கே கிட்ஸ் வரையிலானவர்களை ஈர்த்த சென்னை காமிக்கான் நிகழ்வு. தங்களுக்கு பிடித்த காமிக்ஸ், அனிமே போன்ற கதாபாத்திரங்களாகவே மாறிய பங்கேற்பாளர்கள்.

  • நட்புக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கல்லூரி நிகழ்ச்சியில் தனது திரைப்பட வசனத்தை பேசி மாணவர்களை உற்சாகப்படுத்திய நடிகர் சசிகுமார்.