தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடக்கம். 14 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு.
தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்றும், நெல்லை அல்வாவை விட மத்திய பாஜக அரசு கொடுக்கும் அல்வா தான் பிரபலமாக உள்ளதாக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் விமர்சனம்.
அதிமுக உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்க கோரிய வழக்கு. வரும் 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பும்போது அதற்கான காரணத்தை கூறத்தேவையில்லை என்ற ஆளுநர் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. குடியரசு தலைவர் அவராகவே காரணத்தை கேட்டு தெரிந்து கொள்வாரா? என்றும் கேள்வி.
வேலூரில் கர்ப்பிணி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்போம் என மாநில மகளிர் ஆணைய தலைவி பேட்டி.
பாலியல் குற்றங்கள் பெருகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்.
புதிய வருமான வரிச் சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.
தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி, வைர வியாபாரி ஜெயின் ஷாவின் மகளை கரம்பிடித்தார். அகமதாபாத் நகரில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடைபெற்ற திருமணம்.
மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டம். கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என மத்திய அரசு தகவல்.
சென்னை ஓபன் ATP டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சாகேத் மைனேனி - ராம்குமார் ராமநாதன் இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். அரையிறுதிப் போட்டியில் ரே ஹோ - மேத்யூ கிறிஸ்டோபர் இணையை வீழ்த்தி அபாரம்.