நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில், மஹா சிவராத்திரி விழா கோலாகலம். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏந்தி வழிபாடு.
தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களிலும் இரவு குவிந்த பக்தர்கள். நான்கு கால பூஜைகள் நடைபெற, விடிய விடிய காத்திருந்து தரிசனம்.
கோவை ஈஷா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம். மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் திரை பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்பு.
45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு. 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாநில மொழி கட்டாயம். தெலங்கானாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் அறிவிப்பு.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் எல்கேஜி, யுகேஜி சிறுவர்கள் போல திமுகவும், பாஜகவும் அடித்துக் கொள்வதாக விஜய் சாடல். திராக செயல்பட்டால் எப்படி என்றும் மத்திய அரசுக்கு கேள்வி.
What bro?, நீங்களே பொய் சொல்லலாமா ப்ரோ? என விஜய்க்கு அண்ணாமலை கேள்வி. உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் மூன்று மொழி; தவெக தொண்டர்களுக்கு இருமொழியா? என்றும் காட்டம்.
தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் மக்களவை தொகுதிக்கான இடம் குறையாது. என அமித் ஷா அறிவிப்பு
திமுக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம். தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகக் கூறினாலும் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம்.
உத்தரபிரதேசத்திற்கு அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை உயர்த்துகிறார்கள் என்றும் டிகேஎஸ் இளங்கோவன் பதில்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். அடுத்தடுத்த தோல்வியால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து.
காசாவில் அமலில் உள்ள முதற்கட்ட போர்நிறுத்தம் சனிக்கிழமையுடன் நிறைவு. போர்நிறுத்த நீட்டிப்பு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்வதாக தகவல்.