டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளா செல்ல குவிந்த பக்தர்களால் கடும் கூட்ட நெரிசல். மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு.
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவு.
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை 2ஆம் கட்டமாக நாடுகடத்திய அமெரிக்கா. 116 பேருடன் அமிர்தசரஸ் வந்திறங்கிய விமானம்.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ. 8.50 சதவீதத்தில் 0.25 சதவீதம் குறைத்து 8.25ஆக நிர்ணயம்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காட்டமான பதில்.
40 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது என்றும், கல்வி நிதி விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக சென்ற தமிழர்கள் மீது ரயிலில் தாக்குதல். கதவின் கண்ணாடி ஜன்னல் வழியே அத்துமீறி நுழைந்து வட மாநில இளைஞர்கள் வாக்குவாதம்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள தொழிற்சாலையில் பயோ கேஸ் பாய்லர் வெடித்து விபத்து. சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு.
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை முரண்பாடாக நினைப்பதில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம். எடப்பாடி பழனிசாமி பாஜகவின் டப்பிங் குரல் என்றும் விமர்சனம்.
பாஜகவுக்கு டப்பிங் தேவையில்லை.முதல்வர் ஸ்டாலினுக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது என இபிஎஸ் பாஜகவின் டப்பிங் குரல் என முதல்வர் விமர்சித்த நிலையில் அண்ணாமலை பதில்.
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை என அந்நிறுவனம் விளக்கம். கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம் என்றும் உறுதி.
பத்ம விருதுகளை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிண்டி ராஜ்பவனில் பாராட்டு விழா. நினைவுப்பரிசு வழங்கி பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசிடம் ஒப்படைத்தது பெங்களூரு நீதிமன்றம். தங்க நகைகள் அடங்கிய ஆறு டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் நில ஆவணங்கள் சென்னையில் உள்ள கருவூல அலுவலகத்தில் வைக்கப்பட்டன.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் திமுகவின் கொள்கைகளை பரப்ப வேண்டும் என தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்.
சென்னை அரும்பாக்கத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம். 18 வயது இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.
சென்னை கேகே நகரில் மாத சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி ரேசன் அரிசி கடத்தியதாகப் புகார். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்ற தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் கருத்தால் சர்ச்சை. இந்நிலையில், ராகுலின் சாதி, மதப் பின்னணி குறித்து கேள்வி எழுப்பி விமர்சித்த பாஜக.
உத்தர பிரதேசத்தில் வரதட்சணை தராததால் இளம்பெண்ணுக்கு எச்.ஐ.வி. ஊசி செலுத்தி கொடுமைப்படுத்தியதாக புகார். வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் கணவர், மாமியார் மீது வழக்குப்பதிவு.
கேரளாவில் காதலர் தினத்தன்று பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல். ஒருதலையாக காதலித்த இளைஞர் கைது.
கர்நாடகாவில் ஆட்டோ மீது கார் உரசியதால் எற்பட்ட தகராறில் கோவா முன்னாள் எம்எல்ஏ அடித்துக் கொலை. ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த காவல் துறை.
அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் கடந்தும், மரண தண்டனை அவசியமா என்பதை சுய ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றம் மற்றும் நீதித் துறைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் அறிவுறுத்தல்.
இஸ்ரேல் தலைநகரில் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்க வலியுறுத்தல்.
செர்பியாவில் ஊழலுக்கு எதிராக 3 மாதங்களாக தொடரும் மாணவர்கள் போராட்டம். அதிபர் பதவி விலக வலியுறுத்தி முழக்கம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் சென்ற இந்திய கிரிக்கெட் அணி. ரோகித், கோலி, ஜடேஜா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு.
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையை வீழ்த்தியது டெல்லி. ரன்அவுட் சர்ச்சையுடன் கடைசி பந்தில் த்ரில் வெற்றி.
டிஎன்பிஎல் மெகா ஏலத்தில் விஜய் சங்கரை 18 லட்சம் கொடுத்து வாங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி. ஆல்-ரவுண்டர் முகம்மதை 18 லட்சத்து 40 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுத்தது சேலம் ஸ்பார்டன்ஸ்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை அணி. மற்றொரு போட்டியில் கேரளாவை வென்று பட்டத்தை நெருங்குகிறது மோகன் பகான்.
சென்னையில் களைகட்டிய இசையமைப்பாளர் தேவாவின் இசைக் கச்சேரி. பழைய நினைவுகளை அசைபோட்டதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி.