அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்புடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு. அப்போது , வர்த்தகம், வரிக் கொள்கைகள், சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப அழைக்க பிரதமர் மோடி சம்மதம். சட்டவிரோத குடியேற்றத்திற்கு துணைபோகும் கும்பலை தடுக்க அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவோம் என உறுதி.
இந்தியா வருமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு. விரைவில் இந்தியாவில் சந்திப்போம் எனக்கூறி விருப்பம் தெரிவித்த ட்ரம்ப்.
அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை விதிக்கும் நாட்டிற்கு அதற்கு நிகரான வரி விதிக்கப்படும். பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தும் சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
அமெரிக்காவின் நட்பு நாடுகளே தங்களுக்கு எதிராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் ஆதங்கம். மற்ற நாடுகளை விட இந்தியாவே அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகவும் சூசகப் பேச்சு.
டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி சந்திப்பு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை.
தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்பிக்கள். திட்டங்களை பட்டியலிட்டு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு சில துரோகிகள்தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம். போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மூவர் பணியிடை நீக்கம்.
காவல் துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
மக்கள் பணத்தில் ஊதியம் பெறும் காவல் துறையினர் மக்களுக்காகத்தான் சேவை செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்.
நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை தொடரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை.
மணிப்பூரில் முழுமையாக ஆட்சி செய்ய இயலாது என்பதை பாஜக தாமதமாக ஒப்புக்கொண்டிப்பதாக ராகுல் காந்தி விமர்சனம். மணிப்பூருக்கு நேரில் சென்று அமைதியை மீட்டெடுக்க பிரதமர் முடிவு செய்துவிட்டாரா? என்றும் கேள்வி.
ஜப்பானில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பனி விளையாட்டு. தரையில் அடுக்கப்பட்டுள்ள பனிக்கட்டிகளை அதிகமாக வீசியெறிந்த குழுவினருக்கு பரிசு.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களுக்கு கட்டுப்பாடு. மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல தடை விதித்தது பிசிசிஐ.
அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு இதயம் முரளி என பெயரிட்டது படக்குழு. எல்லோர் மனதிலும் ஒரு இதயம் முரளி இருப்பதாக பட நிகழ்ச்சியில் அதர்வா பேச்சு.