Headlines facebook
இந்தியா

Headlines|அமெரிக்க சென்ற பிரதமர் முதல் சீமானுக்கு பதிலடி கொடுத்த தவெக வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அமெரிக்க சென்ற பிரதமர் முதல் சிமானுக்கு பதிலடி கொடுத்த தவெக வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்து அமெரிக்கா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அதிபர் ட்ரம்புடனான பேச்சுவார்த்தையில் வரி விதிப்பு, சட்டவிரோத குடியேற்றங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகத் தகவல்.

  • புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்ப்பு.

  • மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது வக்ஃபு வாரியம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை. அறிக்கையை தாக்கல் செய்கிறார் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால்.

  • அதிமுகவில் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள் என்று எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

  • அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.

  • விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு, பணக்கொழுப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம். இதற்கு, நடைமுறை அரசியல் யதார்த்தம் சீமானுக்கு புரியவில்லை என தவெக தரப்பில் பதிலடி.

  • மதுரையில் கான்கிரீட் நுழைவுவாயிலை இடிக்கும்போது ஜேசிபி இயந்திரம் மீது தூண் விழுந்து விபத்து. நிகழ்விடத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் விபத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.

  • பெண்களை மட்டும் உள்ளடக்கிய இசைக்குழு உருவாக்கப்படும் என்று பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்வில் இளையராஜா அறிவிப்பு.

  • உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் உரையாடிய ட்ரம்ப் வலியுறுத்தல்.

  • இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி. 14 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரில், இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தல்.